CRIME
அடப்பாவி.! மளிகைக் கடைக்குச் சென்ற 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி..!!
தெலங்கானா மாநிலம் மியாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மார்த்தாண்டா நகரில், கடந்த 2021-ஆம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய சிறுமியைப் பின்தொடர்ந்து வந்த கீலா தர்மா என்ற நபர், குடியிருப்பின் மின்தூக்கி (Lift) அருகே வைத்து அந்தச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்துள்ளார். குற்றச்செயல் நடந்த சமயத்தில் இவர் காச்சிபௌலி பகுதியில் பாதுகாப்பு காவலராகப் பணியாற்றி வந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக 2021 ஆகஸ்ட் 17 அன்று குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். குடியிருப்பில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் காவல்துறையினர் முக்கிய ஆதாரங்களைச் சேகரித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் மற்றொரு சாட்சி மூலமாக குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து, போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
வழக்கை விசாரித்த ரங்காரெட்டி மாவட்ட சிறப்பு நீதிமன்றம், குற்றவாளி கீலா தர்மாவிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
