CINEMA
அவர் கொடுத்த முத்தம் பாக்க காமமா இருந்துச்சா…? ரஞ்சித்தின் மனைவி பரபரப்பு பேட்டி…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று முதல் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது. எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஒரு டாஸ்க் விளையாடும்போது நடந்த சண்டையை அடுத்து ரஞ்சித் சௌந்தர்யாவின் நெற்றியில் முத்தம் கொடுத்தார். இது விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய ரஞ்சித்தின் மனைவி பிரியா, அப்பா தன் மகளுக்கு கொடுப்பது போன்றும், அண்ணன் தன்னுடைய தங்கைக்கு கொடுப்பது போன்றும் தான் அது இருந்தது. அதில் பார்ப்பதற்கு காமம் தெரிந்ததா? என்று கூறியுள்ளார்.