“கனவு இல்லத்தில் புகுந்த எமன்..” ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் கள்ளக்காதலனுடன் மனைவி செய்த பகீர் காரியம்.. கணவனுக்கு நேர்ந்த பயங்கரம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“கனவு இல்லத்தில் புகுந்த எமன்..” ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் கள்ளக்காதலனுடன் மனைவி செய்த பகீர் காரியம்.. கணவனுக்கு நேர்ந்த பயங்கரம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், தனது ஆசை ஆசையாய் கட்டிய கனவு இல்லத்திலேயே மனைவியால் கணவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் மனித உறவுகளின் மீதான நம்பிக்கையையே உலுக்கியுள்ளது. ராஜசேகர் பிராதர் என்ற நபர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் அவர் தனது கனவு இல்லத்தைக் கட்டி முடித்தார். அந்த வீட்டிற்கு வண்ணம் தீட்டுவதற்காக சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெயிண்டர் ஒருவர் வந்துள்ளார். ராஜசேகர் பகல் நேரத்தில் வேலைக்குச் சென்றுவிடுவதால், அந்தப் பெயிண்டர் பகலில் மட்டுமே வீட்டிற்கு வந்து வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஒரு நாள் ராஜசேகர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது சாதாரண விபத்து என்று அனைவரும் நினைத்த நிலையில், சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது உண்மை தலைகீழாக மாறியது. எண் பலகை இல்லாத ஸ்கார்பியோ கார் ஒன்று, ராஜசேகர் மீது திட்டமிட்டு மோதிவிட்டு தப்பிச் சென்றது அதில் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், இந்த கொடூரக் கொலையின் பின்னணியில் ராஜசேகரின் மனைவியும், அந்த பெயிண்டரும் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

Advertisement

ராஜசேகர் வேலைக்குச் சென்ற நேரத்தில், அவரது மனைவிக்கும் அந்த பெயிண்டருக்கும் இடையே ரகசியக் காதல் உறவு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் இவர்களின் தவறான உறவை ராஜசேகர் நேரில் கண்டதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு வெடித்துள்ளது. இதனால் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த மனைவி, பெயிண்டர் மற்றும் சில வாடகை கொலையாளிகளுடன் சேர்ந்து விபத்து போல நாடகமாடி ராஜசேகரைக் கொலை செய்துள்ளார். தற்போது இந்த வழக்கில் ராஜசேகரின் மனைவி, பெயிண்டர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 4 பேர் உட்பட மொத்தம் 6 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in