அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்.. நடைப்பயிற்சி சென்ற முதியவரைத் தும்பிக்கையால் அடித்துக் கொன்ற காட்டு யானை.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

Uncategorized

அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்.. நடைப்பயிற்சி சென்ற முதியவரைத் தும்பிக்கையால் அடித்துக் கொன்ற காட்டு யானை.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான அஞ்சேபால்யா அருகே, திங்கட்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி சென்ற நாகராஜு (60) என்ற முதியவரை யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று அதிகாலை 5:30 மணியளவில் நாகராஜு வழக்கம் போல் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, பன்னர்கட்டா வனப்பகுதியிலிருந்து வெளியேறி அஞ்சேபால்யா பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளது. எதிர்பாராதவிதமாக அந்த யானை தனது தும்பிக்கையால் நாகராஜுவை கொடூரமாகத் தாக்கியதில் பலத்த காயமடைந்து அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்துப் பலியானார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அந்த யானை வந்த வழியே மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றதை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்துக் கண்டறிந்தனர்.

இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த முதியவர் நாகராஜுவின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை கர்நாடக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து முதியவரைக் கொன்ற அந்த யானையைப் பிடிப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அஞ்சேபால்யா மற்றும் பன்னர்கட்டா சுற்றுவட்டாரக் கிராம மக்கள் கடும் பீதியிலும் சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in