LATEST NEWS
இப்படியா விதி விளையாடனும்.? ஜிம்மிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய பெண்… எமனாக வந்து மோதிய பேருந்து… ஏறி இறங்கிய சக்கரம்.. பெரும் பயங்கரம்.!!!
கேரள மாநிலம் கொச்சியின் காக்கநாடு-இன்போபார்க் சாலையில் அமைந்துள்ள ஐ.எம்.ஜி சந்திப்பு அருகே நேற்று காலை நேரிட்ட கொடூர விபத்தில், இன்போபார்க் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த அக்ஷரா (29) என்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். த்ரிசூர் பகுதியைச் சேர்ந்த அக்ஷரா, நேற்று காலை சுமார் 8:20 மணி அளவில் உடற்பயிற்சி கூடத்திலிருந்து (Gym) தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்தத் துயரம் நடந்துள்ளது .
அப்போது அந்த குறுகிய சாலையில் எதிரே அசுர வேகத்தில் வந்த ‘மலையில்’ என்ற தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நடந்து வந்த அக்ஷரா மீது பலமாக மோதியது . மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியது இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு காக்கநாட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி மதிய அளவில் அவர் உயிரிழந்தார் .
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த இன்போபார்க் காவல்துறையினர், பேருந்தின் ஓட்டுநரான பினோய் (43) என்பவரைக் கைது செய்துள்ளனர் . அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 105-ன் கீழ் ‘கொலைக்கு நிகரற்ற மரணம் விளைவித்தல்’ என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
