தான் நடித்துள்ள ஹாலிவுட் பட விழாவிற்கு வேஷ்டி சட்டையில் வந்து மாஸ் காட்டிய தனுஷ்.. வைரலாகும் வீடியோ… - Cinefeeds
Connect with us

CINEMA

தான் நடித்துள்ள ஹாலிவுட் பட விழாவிற்கு வேஷ்டி சட்டையில் வந்து மாஸ் காட்டிய தனுஷ்.. வைரலாகும் வீடியோ…

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இறுதியாக நடித்த மாறன் திரைப்படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கு தனுஷ் கமிட் ஆகி உள்ளார். அதன்படி ஹாலிவுட் இயக்குனர் ரூஸ்சோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்தத் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டார். வருகின்ற ஜூலை 22ஆம் தேதி உலக அளவில் இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது.இந்நிலையில் படம் பிரமோஷன் தொடர்பாக மும்பையில் நடந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். அங்கு வேஷ்டி சட்டையில் வந்துள்ளார்.

என்னதான் கோலிவுட் சென்றாலும் நம்முடைய தமிழ் பாரம்பரியத்தை மறக்காமல் வேஷ்டி சட்டையுடன் சென்ற நடிகர் தனுஷின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த இவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகின்றனர் என்று தான் சொல்லவேண்டும் .,