நடிகர் குமரி முத்துவின் மகளா இது..? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? முதன் முறையாக அவரே வெளியிட்டுள்ள வீடியோ பதிவு.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் குமரி முத்துவின் மகளா இது..? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? முதன் முறையாக அவரே வெளியிட்டுள்ள வீடியோ பதிவு..

Published

on

சினிமாவை பொறுத்த வரை ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் தனிப்பட்ட உடல் பாணியும் வசனம் உசசரிப்பும் இருக்கும். அதனை அடையாளமாக கொண்டு பலர் பிரபலமாகியுள்ளனர். ஆனால் தனது வித்யாசமா ன சிரிப்பையே தனது தனிப் பட்ட அடையாளமாக வைத்து சினிமாவில் கலக்கியவர் பிரபல காமெடி நடிகரான குமரிமுத்து. இவர் மக்களை சிரிக்க வைக்க காமெடியன்கள் தனது காமெடிகள் மூலம் கஷ்டப்பட்ட நிலையில் வெறும் சிரிப்பை வைத்து ரசிகர்களை சிரிக்க வைத்த ஒரே நடிகர் என்றால் அது குமரிமுத்து தான் என்று சொன்னால் அதுமிகையாகாது.

நாகர்கோவிலில் பிறந்த இவர் கடந்த 1979 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘உதிரி பூக்கள்’ அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அங்கீகாரத்தை பிடித்தார் தான் குமரிமுத்து.

Advertisement

இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் துவங்கி விஜ ய், அஜித் வரை பல்வேறு தலைமுறை நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார் குமரிமுத்து. இறுதியாக விஜய் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘வில்லு’ படத்தில் நடித்திருந்தார் குமரிமுத்து.

அதன் பின்னர் உடல் நலக்குறைவால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். நடிகர் குமரிமுத்து தனது 75 வது வயதில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி காலமானர். மூச்சு திணறல் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட குமரிமுத்துக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார்.

Advertisement

இவர் மறைந்து வருடத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் இவரின் மகளான எலிசபத் குமரிமுத்து முதன் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னை உங்களுக்கு தெரியாது நான் தான் குமரிமுத்துவின் மகள் எலிசபத் குமரிமுத்து. நான் இதுவரை எந்த ஒரு சமூகவலத்தள பக்கங்களில் வந்ததே கிடையாது.

இப்போது ஏன் வந்துள்ளேன் என்றால், பல விஷயங்கள் பேச வேண்டி உள்ளது. பொதுவாக எல்லோரையும் பொறுத்த வரை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனற ஆசை இருக்கும். ஆனால் பலரும் அந்த வெற்றியை நோக்கி நகர்வதில்லை.

Advertisement

அதற்கு நாம் செய்ய வேண்டியது என்னுடைய அனுபவங்கள் மற்றும் அப்பாவின் அனுபவங்களை வைத்து கூறுகிறேன். நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் எவ்வளவுக்கு எவ்ளோ அமைதியாக இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் வெற்றியை நெருங்குவோம் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in