நடிகை சரண்யா பொன்வண்ணன் – யின் வீடா இது .? எவ்ளோ பிரமாண்டமா இருக்குனு பாருங்க .. - Cinefeeds
Connect with us

CINEMA

நடிகை சரண்யா பொன்வண்ணன் – யின் வீடா இது .? எவ்ளோ பிரமாண்டமா இருக்குனு பாருங்க ..

Published

on

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின் இவர் மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, சிவப்பு தாலி, அன்று பெய்த மழையில் நான் புடிச்ச மாப்பிள்ளை என பல்வேறு படங்களில் ஹீரோயின் ஆகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமடைந்தார்.  8 வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது வீட்டை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.