பிரபல பிக்பாஸ் நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி! காரணம் என்ன? பதறிய ரசிகர்கள் - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல பிக்பாஸ் நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி! காரணம் என்ன? பதறிய ரசிகர்கள்

Published

on

பிரபல தமிழ் நடிகையும் பிரபல செய்தி வாசிப்பாளருமான பிக்பாஸ் பிரபலம் பாத்திமா பாபு உடல்நல குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை பாத்திமா பாபு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக இருந்தவர். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

Advertisement

அதிலும் இவர் நடிக்கும் “யாரடி நீ மோகினி” தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, உலகநாயகன் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார்.

தற்போது பாத்திமா பாபு விஜய் டிவியின் புதிய ஷோவான BB ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

Advertisement

இந்த நடன ஷோவில் அவர் மோகன் வைத்யா உடன் ஜோடி சேர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தற்போது பாத்திமா பாபு திடீரென அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், அவருக்கு கடந்த 26 ஆம் தேதி சிறுநீரகத்தில் கற்களுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பாத்திமா பாபு ஒரு வீடியோவையும் போஸ்ட் செய்துள்ளார்.

Advertisement

அதில் அவர் கூறுகையில் கடந்த வாரம் திடீரென கீழ்முதுகில் அதிக அளவுக்கு வலி ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனை சென்று சோதித்து பார்த்தபோது அவரது கிட்னியில் பெரிய கல் இருப்பதால் தான் இந்த வலி என தெரிவித்து உள்ளதுடன் சிறுநீரகத்தில் கற்களுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனிடையே, தற்போது தான் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில், ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்து உள்ளார்.

Advertisement

அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தான் அது. தான் ஷூட்டிங் செல்லும் இடங்களில் கழிவறை வசதி அரை கிலோமீட்டர் தள்ளி தான் இருக்கும். அதனால் அடக்கி வைத்து வைத்து இப்படி கல் உருவாகி இருக்கிறது என கூறி இருக்கிறார்.

அதனால் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குறைந்தபட்சம் குடியுங்கள் என்றும் அவர் அனைவருக்கும் அட்வைஸ் கொடுத்து உள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in