CINEMA
கவினுக்கு பதிலா தனுஷை நினைச்சது தப்புன்னு இப்ப தான் தெரியுது… இயக்குனர் நெல்சன் ஓபன் டாக்…!!

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் தான். அந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார்.
இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது பிளடி பக்கர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்நிலையில், நேற்று படத்தில் ஆடியோ லாஞ்சு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய இயங்குனர் நெல்சன், ‘ப்ளடி பெக்கர்’ படத்தில் முதலில் கவினுக்கு பதில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தான் யோசித்தேன். இப்போ படம் பார்த்த பிறகுதான் நினைத்தது தவறு என்று தெரிகிறது என்று கூறியுள்ளார்.