குரு பெயர்ச்சி எப்போது..? சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும், இந்த 5 ராசிக்கும் குரு வாரி வாரி கொடுக்க போகிறார்..! உங்கள் ராசி உள்ளதா..? – cinefeeds
Connect with us

Uncategorized

குரு பெயர்ச்சி எப்போது..? சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும், இந்த 5 ராசிக்கும் குரு வாரி வாரி கொடுக்க போகிறார்..! உங்கள் ராசி உள்ளதா..?

Published

on

ஒவ்வொரு கிரக பெயர்ச்சியும் மனிதனின் வாழ்க்கையில் தா க்க த்தை ஏற்படுத்துவது வழக்கம். ஆனால் நீண்ட காலம் ஒரு ராசியில் அமர்ந்து பலன் தருவதால் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சிகளை மிகவும் ஆர்வத்தோடு கவனிக்கப்பட கூடிய பெயர்ச்சியாக உள்ளது.

அந்த வகையில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை மாதம் 5ம் தேதி அதாவது 20 நவம்பர் 2020ம் தேதி குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.

Advertisement

இந்த நிகழ்வின் போது குரு பகவான் தனுசு ராசி உத்திராடம் 1ம் பாதத்திலிருந்து பெயர்ச்சி ஆகி மகர ராசியில் உள்ள உத்திராடம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

குரு பகவானின் பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசிகள் நல்ல பலனைப் பெற உள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

Advertisement

குரு எப்படி பலன் கொடுப்பார்?
குரு பொதுவாக நின்ற இடத்தை விட பார்க்கும் பார்வைக்கு தான் அதிக பலன் என்பார்கள். அந்த வகையில் தற்போது மகர ராசிக்கு செல்லும் குரு அந்த ராசிக்கு வழங்குவதை விட அவரின் சுப பார்வைகள் படும் ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் வழங்குவார்.

குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?: பரிகாரம் செய்வதற்கு தெரிந்து கொள்ளவும். பொதுவாக குரு உங்கள் ராசிக்கு 2,5,7,9,11 ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தால் யோக பலன்களைத் தருவார்.

Advertisement

அந்த வகையில் குரு பகவான் இந்த 5 ராசிக்காரர்களுக்கும் 11ம் இடத்தில் அமர்ந்து மிக சிறப்பான பலன்களைத் தர உள்ளார். இனி ஒவ்வொரு ராசிக்கும் அளிக்க உள்ள சுப பலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

​ரிஷப ராசி: இதுவரை அஷ்டம குரு எனும் 8ம் இடத்தில் குரு அமர்ந்து ரிஷப ராசிக்கு படாத பாடு படுத்திக் கொண்டிருந்தார். குடும்பம், தொழில், ஆரோக்கியம் என அனைத்து வகையிலும் பல பிரச்னைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். குருவின் மிக சிறப்பான பலன்களை 9ல் குரு அமையும் போது பெறலாம்.

Advertisement

அதுமட்டுமல்லாமல் உங்கள் முயற்சியால் ஒரு செயலில் வெற்றி பெறும் நிலைக்கு சென்று அது கைக்கு எட்டாத நிலை இருந்திருக்கும். இப்படிப்பட்ட பல மோசமான நிலையிலிருந்து விடுபட்டு நற்பலனை அனுபவிக்க உள்ளீர்கள்.

குரு பெயர்ச்சிக்கு பின் உங்கள் ராசிக்கு குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். தொழில். உத்தியோகத்தில் நீங்கள் சந்தித்து வந்த சறுக்கல்கள் மாறும். முன்னேற்றத்தைப் பெறுவதோடு, உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு சிறப்பாக பெற வாய்ப்புள்ளது. உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறக்கூடும்.

Advertisement

​கடக ராசி: இதுவரை ராசிக்கு 6ம் இடத்தில் இருந்த குரு மூலம் நல்ல பலன்களைப் பெறாத நிலை தான் இருந்தது. நோய், எதிரி ஸ்தானத்தில் குரு இருந்ததால், கடக ராசியினர் எ திர்பாராத திடீர் செலவுகள் மருத்துவத்திற்காகச் செய்ய வேண்டி இருந்திருக்கும். மேலும் தொழில், வியாபாரம், வேலையில் உங்களின் எ திரிகளின் ஆளுமை இருந்திருக்கும்.

அதனால் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தடை இருந்திருக்கும். பலருக்கு நிதி நிலைமை மோ சமாக தான் இருந்திருக்கும். குறிப்பாக திருமணம் உள்ளிட்ட சுப காரியம் நடக்கவில்லையே என நினைப்பவர்களுக்கு சிறப்பாக நடந்தேறும்.

Advertisement

சனி பகவான் உங்கள் ராசிக்கு சாதகமாக இல்லாவிட்டாலும். ராகு உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் இருப்பது மிக யோகத்தை அளிப்பதாக இருப்பது மேலும் சிறப்பு.

​கன்னி ராசி: கன்னி ராசிக்கு 4ம் இடத்தில் இருந்த குரு பகவான் இந்த பெயர்ச்சியில் 5ம் இடத்திற்கு செல்வதால், இதுவரை இருந்த சாதகமற்ற சூழல் காரணமாக தடைப்பட்ட காரியங்கள் இனி சிறப்பாக நிறைவேறும். தடைப்பட்ட முன்னேற்ற நிலை இனி மாறும்.

Advertisement

தொழில், உத்தியோகத்தில் நீங்கள் விரும்பிய இலக்கை எட்ட படாதபாடு பட்டுகொண்டிருந்திப்பீர்கள். இனி அந்த நிலை மாறி நீங்கள் தொட்ட காரியங்கள் சாதகமான முடிவைத் தரும்.

5ம் இட குரு அவரின் இடத்திலிருந்து பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானம் மற்றும் ஜென்ம ராசியை பார்ப்பது மேலும் விசேஷம். இதனால் இந்த பெயர்ச்சி காலத்தில் குருவின் மூலம் கன்னி ராசியின் பல யோக பலன்களைப் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

Advertisement

​தனுசு ராசி: குரு பெயர்ச்சியின் காரணமாக அடுத்து மிக நல்ல பலன்களைப் பெற உள்ள ராசி தனுசு ராசி. கடந்த ஒரு வருடம் மட்டுமல்லாமல், ஏழரை சனி, ஜென்ம ராசியில் கேது என அமர்ந்து பல கஷ்டங்கள், சங்கடங்களை அனுபவித்து வந்தவர்கள் தனுசு ராசியினர். இந்த நிலையில் நல்ல முன்னேற்றத்தை அடையக் கூடியவர்களாக தனுசு ராசியினர் உள்ளனர். தொழில், உத்தியோகத்தில் இருந்த பின்னடைவான சூழல் மாறி நல்ல முன்னேற்றத்தைச் சந்திப்பீர்கள்.

சிலர் குரு 2ம் இடத்திற்கு செல்வதால் நீசமடைவார் என்பார்கள். ஆனால் அப்படி இல்லை. இந்த முறை தனுசு ராசியினருக்கு குருவின் அருள் யோக பலனை அள்ளித் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement

​​மீன ராசி: குரு பெயர்ச்சியால் ராஜ யோகத்தைப் பெற உள்ள ராசி மீன ராசியினர். உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் குரு அமைந்திருப்பது மிக யோகமாக இருக்கும். 10ம் இடத்தில் இருந்த குருவினால் ஆரோக்கிய பிரச்னை, குடும்ப அமைதியின்மை என பல சிக்கல்களுக்கு இடையே இருந்திருப்பீர்கள்.

11ல் குரு இருப்பது நீச நிலை என கூறுவர். அதனால் பெரியளவில் யோக பலனைத் தரமாட்டார் என கூறுவதில் உண்மையில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in