கூகுள் செயலியில் பிழை…! – தமிழ் இளைஞருக்கு அடி த்த பேரதிர்ஷ்டம்…! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா..? – cinefeeds
Connect with us

Uncategorized

கூகுள் செயலியில் பிழை…! – தமிழ் இளைஞருக்கு அடி த்த பேரதிர்ஷ்டம்…! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா..?

Published

on

கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது.

செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து வரும் கூகுளில் பிழைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுபவர்களுக்கு அந்நிறுவனம் சன்மானம் அளித்து பாராட்டி வருகிறது.

Advertisement

அந்தவகையில் சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன் கூகுளில் ‘APPSheet’ எனப்படும் அப்ளிகேஷன் தயாரிப்பதற்கான செயலியில், வாடிக்கையாளரின் தகவல்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் திருடப்படுகிறது என்ற பிழையை கூகுள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி அனுப்பியுள்ளார்.

அவரின் இந்த சேவையை அங்கீகரித்துள்ள கூகுள் நிறுவனம், அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,30,000 பரிசு தொகை வழங்கி பாராட்டியுள்ளது.

Advertisement

மேலும் அவரின் பெயரை கூகுளின் Hall of Fameல் இணைத்து மரியாதை அளித்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீராம்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in