LATEST NEWS
1 இல்ல 2 இல்ல…. காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் சரத்குமார்…. எத்தனை நடிகைகளை காதலித்தார் தெரியுமா….????

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கியவர் சரத்குமார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடி பில்டர் ஆகவும் இருப்பவர். இவர் முதன் முதலில் கண் சிமிட்டும் நேரம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம் மற்றும் சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். அந்தத் திரைப்படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தன.
இதுவரை 130 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சினிமா ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசியலிலும் திகழ்ந்தவர். இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சாயாதேவியை சரத்குமார் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அவருடன் விவாகரத்து செய்த அந்த வருடமே நடிகை ராதிகாவை காதலித்து மறுமணம் செய்து கொண்டார் சரத்குமார். இந்நிலையில் சரத்குமார் பற்றிய பழைய கதை ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது சரத்குமார் தேவயானி, ஹீரா, நக்மா மற்றும் சிம்ரன் என தனது சினிமா பயணத்தில் பலரையும் காதலித்து உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.