CINEMA
விஜய்யை சந்திக்கும் போதெல்லாம் அதுவும் கூடவே வரும்…. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவிற்கு வரும்போது பெரிய சினிமா பலத்தோடு இருந்தார். இவர் நடித்த முதல் படமே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதன் பிறகு விஜய், சூர்யா, விஷால் என்று கோலிவுட்டில் முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர், நடிகர் விஜய்யை எப்போது சந்தித்தாலும் ஒரு விதமான பதற்றம் தொற்றிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், சிரஞ்சீவியை சந்திக்கும் போது இருக்கும் அதே உணர்வு நடிகர் விஜய்யை சந்திக்கும் போதும் இருப்பதாகவும், அவர் மீதுள்ள மரியாதை எப்போதும் மாறாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் விஜய்யோடு ‘பைரவா’ மற்றும் ‘சர்க்கார்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.