LATEST NEWS
ரியல் வாழ்க்கையில் ஹீரோவாக இருந்த 5 நடிகர்கள்….. யாரெல்லாம் அவங்க?….. வாங்க பார்க்கலாம்….!!!!

நிஜ வாழ்க்கையில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்த சில நடிகர்களை பற்றி தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம். அதில் முதலாவதாக இருப்பது சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில் அவர்களுக்கு வில்லனாக நடித்து அசத்தியவர் நம்பியார். டெரர் வில்லனாக அறியப்பட்ட இவர் நிஜ வாழ்க்கையில் ஒரு சரக்கை தொட்டது கூட கிடையாதாம். அது மட்டும் இல்லாமல் அவர் அசைவம் சாப்பிட மாட்டாராம்.
அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என்று நடித்து வருபவர் நடிகர் பிரசன்னா. இவர் சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்து வருகிறார்.
அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்படுபவர் ஜெயசங்கர். இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். இவர் நிஜ வாழ்க்கையில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் நேர்மையாக இருக்கின்றார். 70 காலகட்டத்தில் எம்ஜிஆர் சிவாஜி போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்து பிரபலமானவர். அசோகன் நடிப்பு மட்டும் இல்லாமல் தயாரிப்பிலும் பட்டையை கிளப்பியவர். இவரும் குடிப்பழக்கம் இல்லாத ஒரு நபராம்.
அடுத்தது சிவகுமார், சூர்யாவின் தந்தையான இவர் எம்ஜிஆர் சிவாஜி காலகட்டத்தில் இருந்து நடித்து வருகிறார். படங்களில் ஒரு குடிகாரனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத மனிதராக வாழ்ந்து வருகிறார்.