LATEST NEWS
திரைப்படத்திற்காக உண்மையிலேயே மொட்டை அடித்து கொண்ட நடிகர்கள் யார் யார் தெரியுமா… இதோ பாருங்க..!!
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஹீரோக்கள் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்கு பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்து தங்களை சிறந்த நடிகர் என்று நிரூபித்து காட்டியுள்ளனர். குறிப்பாக திரைக்கதைக்காக தங்களையே மாற்றிக் கொள்ளும் நடிகர்கள் ஏராளம். அதன்படி திரைப்படத்திற்காக மொட்டை அடித்துக் கொண்ட நடிகர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
கமல்ஹாசன்:
பல புதுமையான தொழில்நுட்பங்களுடன் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மனநோயில் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரத்திற்காக மொட்டை அடித்து உடல் எடையை அதிகரித்து தனது உருவத்தை அப்படியே மாற்றிக் கொண்டார்.
ரஜினிகாந்த்:
பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சிவாஜி. ரசிகர்கள் இன்றும் கொண்டாடும் ரஜினியின் திரைப்படங்களில் முக்கியமாக இடம் பிடித்துள்ள சிவாஜி திரைப்படத்தில் கடைசி காட்சியில் மிக ஸ்டைலாக தனக்கே உரிதான நடிப்பில் ரஜினி அசத்தியிருப்பார். அந்த திரைப்படத்திற்காக அவர் நிஜத்தில் மொட்டை அடித்துக் கொண்டார்.
விக்ரம்:
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒரு திரைப்படத்திற்காக தன்னை மெருகேற்றிக் கொள்வதில் வல்லவர் விக்ரம். கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாகவே மாறி கலக்குவார். குறிப்பாக இயக்குனர் சங்கரின் ஐ திரைப்படத்தில் உடல் எடையை குறைத்து மொட்டை அடித்து அடையாளம் தெரியாத அளவிற்கு தன்னைத்தானே செதுக்கி கொண்டார். அதற்கு முன்னதாக பாலாவின் சேது திரைப்படத்திற்காகவும் விக்ரம் மொட்டை அடித்துக் கொண்டார்.
சூர்யா:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம் தான் கஜினி. அந்தத் திரைப்படத்தில் நினைவாற்றலை இழந்து தவிக்கும் நபராக இவர் நடித்திருப்பார். இதில் ஒரே நபர் இரு வேறு காலகட்டங்களில் இருக்கும் வித்தியாசத்தை மிக சத்துருபமாக அவர் காட்டியிருப்பார். இதில் மிக ஸ்டைலாக அதே சமயம் மொட்டை அடித்து நோயுடன் அவதிப்படும் நபராகவும் சூர்யா நடித்திருப்பார்.
அதர்வா:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான முரளியின் மகன்தான் அதர்வா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பூமராங் என்ற திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்காக இவர் உண்மையிலேயே மொட்டை அடித்துக் கொண்டார்.
