“அவனுடன் வேறு பெண்ணுக்குத் தொடர்பு…” நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் துரோகத்தால் 24 வயது பெண்ணுக்கு எடுத்த கொடூர முடிவு.. மணமகள் எழுதிய கடிதத்தில் இருந்த அதிர்ச்சி உண்மை…!! – cinefeeds
Connect with us

CRIME

“அவனுடன் வேறு பெண்ணுக்குத் தொடர்பு…” நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் துரோகத்தால் 24 வயது பெண்ணுக்கு எடுத்த கொடூர முடிவு.. மணமகள் எழுதிய கடிதத்தில் இருந்த அதிர்ச்சி உண்மை…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி கோத்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் துரோகம் மற்றும் மன உளைச்சல் காரணமாக 24 வயது இளம் பெண் சாயா என்பவர் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இவருக்கு மத்தியப் பிரதேச மாநிலம் ரைசேன் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷ் பக்கன் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் 2027 டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், தனது தற்கொலைக்கு மாப்பிள்ளை ஹர்ஷ் பக்கன் தான் காரணம் என்று சாயா எழுதி வைத்துள்ள உருக்கமான தற்கொலைக் கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி மற்றும் குடும்பத்தினர் கூறுகையில், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை ஹர்ஷ் பக்கனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அந்தப் பெண்ணுடன் சேர்ந்து கொண்டு சாயாவை இந்தத் திருமணத்தை நிறுத்துமாறு கூறித் தொடர்ந்து மன ரீதியாகக் கடுமையான அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் துரோகத்தைத் தாங்க முடியாமல் சாயா விபரீத முடிவு எடுத்துள்ளார். இது குறித்துப் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஹர்ஷ் பக்கன், அவரது பெற்றோர் மற்றும் அடையாளம் தெரியாத அந்தப் பெண் ஆகியோருக்கு எதிராகக் கோத்வாலி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in