நள்ளிரவில் கொடூரம்.. போதை கணவனை உயிரோடு எரித்துவிட்டு.. காவல் நிலையத்தில் சரணடைந்த மனைவி.. நடந்தது என்ன..? குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

நள்ளிரவில் கொடூரம்.. போதை கணவனை உயிரோடு எரித்துவிட்டு.. காவல் நிலையத்தில் சரணடைந்த மனைவி.. நடந்தது என்ன..? குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர் காலனியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சங்கர் குரு (35). இவருடைய மனைவி சங்கரேஸ்வரி (30) விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இந்தத் தம்பதியருக்கு 10 மற்றும் 7 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று 3 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த நிலையில், குழந்தைகளுக்காக மனம் மாறி கடந்த ஓராண்டாக மீண்டும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சங்கர் குரு கடுமையான மதுபோதையில் வீட்டுக்கு வந்து, மனைவி சங்கரேஸ்வரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சங்கரேஸ்வரி, போதையில் நிலைகுலைந்து நின்ற கணவர் மீது வீட்டில் இருந்த பெயிண்ட் எரிபொருள் ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றிய சங்கர் குரு அலறியடித்தபடி அங்கும் இங்கும் ஓடியதால், வீடு முழுவதும் தீ பரவி வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன. இதில் உடல் கருகி சங்கர் குரு பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இக்கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றிய சங்கரேஸ்வரி, நேராக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சங்கர் குருவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட கோபத்தோடு, மதுபோதையில் அவர் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் ஆத்திரம் தாங்காமல் தீ வைத்துக் கொன்றதாகச் சங்கரேஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in