சினிமா பாணி பயங்கரம்.. காலை 10 மணிக்கு கையெழுத்து… 11 மணிக்கு பிரபல ரவுடி ஜங்ஷன் டேவிட் ஓட ஓட வெட்டிக்கொலை.. 7 பேர் அதிரடி சரண்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

சினிமா பாணி பயங்கரம்.. காலை 10 மணிக்கு கையெழுத்து… 11 மணிக்கு பிரபல ரவுடி ஜங்ஷன் டேவிட் ஓட ஓட வெட்டிக்கொலை.. 7 பேர் அதிரடி சரண்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

சேலம் சூரமங்கலம் அருகே ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜங்ஷன் டேவிட் (41), மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது கொலை, நில மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த டேவிட், 18 நாட்களுக்கு முன்புதான் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்திருந்தார்.

நேற்று காலை சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டுவிட்டு, டேவிட் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரும்பாலை சாலையில் உள்ள புதுரோடு மேம்பாலம் அருகே வந்தபோது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அவரை வழிமறித்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டத் தொடங்கினர். அவர்களிடமிருந்து உயிரைக் காக்க முயன்ற டேவிட் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்தபோதிலும், அந்தக் கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

தகவலறிந்து வந்த சூரமங்கலம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, காவல் ஆணையாளர் பாபு உத்தரவின் பேரில் கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்தனர். இதற்கிடையே, இக்கொலை வழக்கில் தொடர்புடைய ராஜன், கார்த்திக், சுலைமான், மோகன், ரகு, அருண்குமார், மணிகண்டன் ஆகிய 7 பேர் சேலம் கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் போலீசாரிடம் அதிரடியாகச் சரணடைந்துள்ளனர். இக்கொலைக்கான உண்மையான பின்னணி என்ன என்பது குறித்துப் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in