LATEST NEWS
மனைவியுடன் திருவண்ணாமலையில் 14கி.மீ கிரிவலம் சென்ற நடிகர் அருண் விஜய்.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவர் நடிகர் விஜயகுமாரின் மகன்தான். ஆரம்பத்தில் இவரின் படங்கள் ஹிட் கொடுக்காத நிலையில் அடுத்தடுத்த இவரின் நடிப்பில் வெளியான பல படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பின்னர் இவரின் திரைப்படங்கள் ஹிட் ஆகாத காரணத்தால் நடிப்பில் இருந்து ஒதுங்கி தயாரிப்பு பணிகளில் ஈடுபட அவரின் குடும்பம் வலியுறுத்தியது.
இதனால் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவரின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அந்த படம் அமைந்தது.
அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது இவர் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பின் போது அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்தார்.
இவர் ஹீரோவாக இருந்தாலும் வில்லனாக இருந்தாலும் இவர் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தனி ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இதனிடையே அருண் விஜய் ஆர்த்தி என்பவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது புர்வீ என்ற மகளும், அர்ணவ் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் அருண் விஜய் சமீபத்தில் தனது மனைவியுடன் திருவண்ணாமலை அருணாச்சலலேஸ்வரர் கோவிலுக்கு 14 கிமீ கிரிவலம் சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் பலரும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
