ஏர்போர்ட்டில் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராஷ்மிகா.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

ஏர்போர்ட்டில் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராஷ்மிகா.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் கீதா கோவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி சீதாராமன், குட் பை என்ற திரைப்படங்களில் நடித்த ராஷ்மிகா சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்த நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் தெலுங்கிலும் பிசியாக நடித்து வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Advertisement

தற்போது அனிமல் மற்றும் புஷ்பா 2 உள்ளிட்ட பட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா விமான நிலையத்திற்கு சென்று இருந்த நிலையில் அப்போது அங்கிருந்து சிறுவன் தன்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என ஆசையுடன் இருந்ததை பார்த்த ரஷ்மிகா அந்த சிறுவனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in