ஐயோ என்ன கொலை பண்ண பார்க்கிறாங்க.. திடீரென கதறிய நடிகை தீபா.. என்ன காரணம்..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ என்ன கொலை பண்ண பார்க்கிறாங்க.. திடீரென கதறிய நடிகை தீபா.. என்ன காரணம்..?

Published

on

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகைகளில் ஒருவர் தான் தீபா. மெட்டி ஒலி சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். பல வருடங்களாக சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் 20 வருடங்களுக்கு பிறகு தான் அவருக்கான ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதாவது கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததால் அவருக்கு அந்த அங்கீகாரம் கிடைத்தது.

அதன் பிறகு குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நிலையில் அதில் இவரின் நகைச்சுவை மற்றும் குழந்தைத்தனமான பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இவரை தீபா அக்கா என்று பலரும் அன்போடு அழைத்து வருகின்றனர். இவரின் எதார்த்தமான பேச்சும் சிரிப்பும் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. சிவகார்த்திகேயனின் டாக்டர் என்ற திரைப்படத்திலும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். தற்போது பிசியான நடிகையாக மாறிவிட்டார்.

Advertisement

இந்நிலையில் சமைக்க தெரிந்த பிரபலங்கள் மற்றும் ருசித்து ருசித்து சாப்பிட மட்டும் தெரிந்த பிரபலங்கள் என்ற தலைப்பில் தமிழா தமிழா நிகழ்ச்சிகள் விவாதம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபாவை தொகுப்பாளர் ஆவுடையப்பன் காபி ஒன்றை அருந்த கூறியுள்ளார்.

ஆனால் அதனை குடிப்பதற்கு தீபா மறுத்த நிலையில் அங்கு இருக்கும் பெஷன்ட் ரவி தீபாவின் கழுத்தைப் பிடித்த அந்த காபியை குடிக்க வைத்துள்ளார். அப்போது ஐயோ என் கழுத்தைப் பிடித்து நெறிக்குறாங்க, என்னை கொலை பண்ண பார்க்கிறாங்க நான் ஜீ தமிழ் மேலேயே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து விடுவேன் என்று தீபா கதறி உள்ளார். தற்போது இது  இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in