CINEMA
நடிகர் சிங்கம்புலியின் மனைவி ராணுவ கர்னலா…? கார்கில் போரில் கலக்கிய ரியல் ஹீரோயின்…! பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்…!!
தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வரும் சிங்கம்புலியின் மனைவி குறித்து வியக்கத்தக்க தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய மனைவி புஷ்பவல்லி இந்திய ராணுவத்தின் மருத்துவப் பிரிவில் மிக உயரிய பதவியான ‘கர்னல்’ அந்தஸ்தில் பணியாற்றி வருகிறார். சிங்கம்புலியின் உறவினரான இவர், கார்கில் போரின் போது சுமார் 60 நாட்கள் பதுங்கு குழியில் தங்கியிருந்து காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்து பெரும் பங்காற்றியுள்ளார். போருக்குப் பின் அரசு வழங்கிய சலுகைகளைத் தனக்காகப் பயன்படுத்தாமல், பெற்றோருடன் தங்குவதற்காகப் பணியிட மாற்றத்தை மட்டுமே கோரிக்கையாக வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது கடினமான ஆரம்பக் காலத்தில் குடும்பத்தையும், குழந்தைகளையும் ராணுவத்தில் பணியாற்றியபடியே கவனித்துக் கொண்ட மனைவியே தனது வெற்றிக்குப் பின்னால் இருப்பதாகச் சிங்கம்புலி பெருமிதத்துடன் கூறுகிறார். சுமார் 160-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தேச சேவையில் பிஸியாக இருக்கும் இவரது மனைவி வெறும் ஐந்து படங்களை மட்டுமே பார்த்துள்ளாராம். அந்தமான், ஹைதராபாத் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ள புஷ்பவல்லி, தற்போது கர்னலாகப் பதவி உயர்வு பெற்றுத் தொடர்ந்து ராணுவத்தில் சேவையாற்றி வருகிறார்.
