CINEMA
இனி ‘ஜெய்’ இல்லை…! ரகசியமாக பெயரை மாற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ…! மதம் மாறியது குறித்து மனம் திறந்த நடிகர் …! வைரல் வீடியோ…!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜெய், தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கான உண்மையான காரணத்தை அண்மையில் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்த ஜெய், மாலை அணிந்து சபரிமலைக்குச் சென்றதுடன், இயேசுவுக்காக ஜெபமாலை அணிந்து ஒரு வருடம் விரதம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், கோயில்களில் தனக்குத் தொடர்ந்து சில கசப்பான அவமானங்களே மிஞ்சியதாகவும், அது தன் மனதிற்குப் பெரும் வலியைத் தந்ததாகவும் அவர் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்து ஏற்பட்ட அவமானங்களால் மனமுடைந்திருந்த ஜெய், ஒருமுறை மசூதிக்குச் சென்றபோது அங்கு தனக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய அனுபவம் கிடைத்துள்ளது. தான் ஒரு பிரபலமான நடிகர் என்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்திருந்தும், தொழுகையின் (நமாஸ்) போது யாரும் தன்னை ஒரு விஐபி-யாகப் பார்க்காமல், மற்றவர்களோடு ஒருவராகவே நடத்தியதாகக் கூறியுள்ளார். தொழுகை முடிந்து வெளியே வரும்போதுதான் சிலர் தன்னிடம் அன்பாகப் பேசினார்களே தவிர, யாரும் புகைப்படம் (Photo) எடுக்க வற்புறுத்தவில்லை என்றும், அப்போதுதான் மசூதிக்குள் அனைவரும் சமம் என்ற உன்னத உண்மையை உணர்ந்ததாகவும் ஜெய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மசூதிக்குள் இருக்கும் அமைதியும் சமத்துவமும் தன்னை பெரிதும் கவர்ந்ததாகக் குறிப்பிட்ட ஜெய், “மசூதிக்குள் நுழைந்துவிட்டால் அங்கு அல்லாஹ்தான் பெரியவர். ஒரு மனிதன் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும், அங்கு அனைவரும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள். மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போல இங்குத் தொழுகையின்போது எந்தவித தள்ளுமுள்ளும் இருக்காது, யாரையும் வலுக்கட்டாயமாக வெளியே போகச் சொல்லவும் மாட்டார்கள்; எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமைதியாக அமர்ந்து தொழலாம்” என்று அங்கு நிலவும் ஆன்மீகச் சூழலை விவரித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே தான் இஸ்லாம் மதத்தைப் தீவிரமாகப் பின்பற்றி வருவதாகவும், இதனால் தனது குணத்தில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெய் கூறியுள்ளார். ஆரம்பத்தில் எந்தக் கடவுளையும் கும்பிடாமல் இருந்த பையன், தற்போது இவ்வளவு பக்தியாக இருப்பதைப் பார்த்துத் தனது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்துள்ளார். மதம் மாறிய பிறகும் சினிமா காரணங்களுக்காக இதுவரை தனது பெயரை மாற்றாமல் இருந்த ஜெய், விரைவில் தனது பெயரை ‘அஜீஸ் ஜெய்’ (Aziz Jai) என அதிகாரப்பூர்வமாக மாற்றும் யோசனையில் இருப்பதாக அந்தப் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
