கோட் சூட் போட இதான் காரணம்…! எதிரிகளுக்குச் சவால் விடும் பிளாக் & ஒயிட்…! உடை விமர்சனங்களுக்குத் தவெக தலைவர் விஜய் கொடுத்த அதிரடி விளக்கம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கோட் சூட் போட இதான் காரணம்…! எதிரிகளுக்குச் சவால் விடும் பிளாக் & ஒயிட்…! உடை விமர்சனங்களுக்குத் தவெக தலைவர் விஜய் கொடுத்த அதிரடி விளக்கம்…!!

Published

on

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளில் வென்று, பின்னர் திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்த தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், திருச்சியில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்குப் பிரம்மாண்ட வீதி உலா (ரோடு ஷோ) நடத்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமக்கும் தற்போதைய ஆளுங்கட்சியான திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாகவும், மற்ற சிறிய கட்சிகளுக்கு இங்கு எவ்வித வேலையும் இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

தேர்தல் முடிந்து எதிர்க்கட்சிகள் புலம்பத் தொடங்கிவிட்டதாகச் சாடிய அவர், பெரியார், அண்ணா, மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழியைப் பின்பற்றித் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகத் தமது அரசு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உழைக்கும் என உறுதி அளித்தார்.

Advertisement

மேலும், மேடைகளில் தாம் கோட் சூட் அணிவதை விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த முதலமைச்சர், அதிகாரம் படைத்தவர்கள் மட்டும்தான் இந்த ஆடைகளை அணிய வேண்டுமா எனக் கேள்வி எழுப்பினார். எல்லாவற்றிலும் ஒளிவுமறைவின்றி வெளிப்படைத்தன்மையுடன் (Black & White) செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கவே இத்தகைய உடைகளைத் தேர்ந்தெடுப்பதாகத் தனது ஆடை ரகசியத்தைப் பகிர்ந்துகொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in