LATEST NEWS
“அரசுப் பள்ளிக்குள் புகுந்து முதல்வர் விஜய் படத்தை மாட்டி ரீல்ஸ்…” தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்…. அதிரடி நடவடிக்கை…!!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த தளவராம்பூண்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்குள், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி வகுப்பறைக்குள் நுழைந்துள்ளனர். அங்குப் படித்துக் கொண்டிருந்த சிறுவர், சிறுமிகளிடம் தங்களது கட்சித் தலைவர் விஜய்யின் படத்தை எப்படிக் காண்பித்து, “இவர் யார்?” என்று வினவியுள்ளனர்.
சிறுவர்கள் ‘விஜய்’ என்று பதிலளித்ததும், அங்கிருந்த த.வெ.க-வினர் “விஜய் அண்ணா” என்று முறைப்படி கூப்பிடுமாறு வற்புறுத்தியதோடு, அந்தப் புகைப்படத்தை வகுப்பறையின் சுவரில் எங்கு மாட்டுவது என்று தங்களுக்குள் விவாதித்துள்ளனர். பின்னர், அப்படத்தைப் பள்ளியிலேயே மாட்டிவிட்டு, அதனைத் தங்களது அலைபேசியில் ‘ரீல்ஸ்’ வீடியோவாகப் பதிவு செய்து இணையத்திலும் பதிவிட்டுள்ளனர்.
இக்கல்வி நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் மிக வேகமாகப் பரவி, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே கடும் கண்டனங்களையும் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தங்களது இயக்கத்திற்குப் பெரும் அவப்பெயரையும் சங்கடத்தையும் உண்டாக்கியதை உணர்ந்த த.வெ.க தலைமை, தங்களது ஒன்றிய நிர்வாகி ராஜேஷைக் கட்சியிலிருந்து உடனடியாக அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
தங்களது அமைப்பின் விதிகளுக்கு முரணாகவும், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும் தற்போதைய அமைச்சருமான தென்னரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
