CINEMA
நடிகர் விஷால் நடித்த 40 நாள் காட்சிகளை அசால்ட்டாக வெட்டி தூக்கி எறிந்த பிரபல இயக்குனர் – அதிர்ந்து போன நடிகர் ஆர்யா, அதுக்கு அந்த இயக்குனர் சொன்ன காரணத்தை கேட்டால் தலையே சுத்துதே…!
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஆர்யா அவன் இவன் படம் குறித்து கூறியதாவது, அவன் இவன் படப்பிடிப்பு நடந்த தொடக்க காலகட்டத்தில் எனக்கு வேறு சில படங்களில் நடிக்கும் கமிட்மெண்டுகள் இருந்தது. அதனால் விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்க இயக்குனர் பாலா முடிவு செய்து இருக்கிறார். அதன்படி 40 நாட்கள் வரை விஷால் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளது.
அதன் பின்னர் நான் படப்பிடிப்பு தளத்துக்கு சென்றபோது அங்கு விஷால் இல்லை. இதுகுறித்து இயக்குனர் பாலாவிடம் நான் கேட்டேன். அதற்கு அவர், இத்தனை நாட்கள் எடுத்த காட்சிகளில் விஷால் பார்ப்பதற்கு விஷால் போலவே இருக்கிறார். அவர் கதாபாத்திரமாக மாறவில்லை. அதனால் அவருடைய பல் மற்றும் கண் அமைப்பை மாற்றுவதற்காக சென்னைக்கு அவரை அனுப்பி உள்ளேன் என்று பாலா கூறினார்.
அப்படி என்றால் 40 நாட்கள் உழைப்பு மற்றும் விஷால் நடிப்பில் எடுக்கப்பட்ட புட்டேஜ் என்ன ஆனது என்று நான் அவரிடம் கேட்டபோது பாலா ஒரு புன்னகையுடன், அந்த காட்சிகளை முழுமையாக படத்திலிருந்து நீக்கி விட்டதாக கூறினார். கதாபாத்திரத்தின் கச்சிதமான தன்மைக்காக 40 நாட்கள் விஷாலின் உழைப்பை பாலா வெட்டி தூக்கி எறிந்தது எனக்கு அதிர்ச்சியை தந்தது என்று ஆர்யா கூறியிருக்கிறார்.
