CINEMA
கங்குவா தராததை கருப்பு தந்து விட்டது, தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடிகள் வசூலை அள்ளியதா கருப்பு படம்? பல ஆண்டுகளுக்கு பிறகு தரமான சம்பவத்தை நிகழ்த்திக் காட்டிய நடிகர் சூர்யா!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பில் சூர்யா திரிஷா மற்றும் பலர் நடித்த கருப்பு படம் கடந்த மாதம் மே 15ம் தேதி வெளியானது. இந்த படம் உலக அளவில் மொத்தம் 340 கோடி ரூபாய் வசூலித்ததாக கடந்த 12ம் தேதி அதிகாரபூர்வமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
தற்போது தமிழ்நாட்டில் மட்டும் கருப்பு படம் 191 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தமிழக விநியோக நிறுவனம் சக்தி பிலிம் பேக்டரி அறிவித்துள்ளது. கருப்பு படம் வெளியான 3 நாட்களில் 60 கோடி 4 நாட்களில் 80 கோடி 7 நாட்களில் 100 கோடி 10 நாட்களில் 130 கோடி 13 நாட்களில் 150 கோடி 20 நாட்களில் 175 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக இதற்கு முன்பு அறிவித்திருந்தனர்.
அதன் பின்பு கூடுதலாக தற்போது 16 கோடி ரூபாயை கருப்பு படம் வசூலித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் கருப்பு படம் 191 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கருப்பு படம் கடந்த 12ம் தேதியே ஓடிடியில் வெளியாகிவிட்டது. இருப்பினும் சில தியேட்டர்களில் இன்னும் கருப்பு படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
