CINEMA
தாய்கிழவி பட இயக்குனரை டார்ச்சர் செய்கிறாரா ஹீரோ சிவகார்த்திகேயன்? படப்பிடிப்பு தள்ளிப் போக காரணமே அதுதானாம் – விரைவில் பஞ்சாயத்து நடத்த தயாரான தயாரிப்பாளர் கமல்ஹாசன்!
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது சேயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் டைரக்ட் செய்து வருகிறார். தேனி மாவட்டத்தில் இந்த படத்தின் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இதற்கிடையே குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று விட்டார்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போக படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் தான் என கூறப்படுகிறது. சேயோன் படத்தில் நான் நடிக்கும் காட்சிகளை மாஸ் ஆக காட்டுங்கள். நான் வருகிற சீன் எல்லாம் மாஸ் ஆக இருக்க வேண்டும் என்றும் இயக்குனரை சிவகார்த்திகேயன் டார்ச்சர் செய்திருக்கிறார். இதற்கு இயக்குனர் சம்மதிக்கவில்லை.
தாய்கிழவி படம் யதார்த்தமாக ஒரு படமாக இருந்ததால்தான் பெரிய வெற்றியை பெற்றது. அதனால் எல்லா காட்சியும் மாஸ் ஆக காட்டினால் படத்தில் யதார்த்தம் இருக்காது என்று கூறிய நிலையில் தான் படப்பிடிப்பு தள்ளிப் போய் விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பஞ்சாயத்து மிக விரைவில் தயாரிப்பாளர் கமல்ஹாசன் முன்னிலையில் பேசப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
