மறைந்த இயக்குர் கே பாக்யராஜை பெருமைப்படுத்தும் விதமாக, இந்த 3 கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றுமா? தமிழக முதல்வர் விஜய்க்கு பிரபல எழுத்தாளர் வைத்த முக்கியமான வேண்டுகோள்! – cinefeeds
Connect with us

CINEMA

மறைந்த இயக்குர் கே பாக்யராஜை பெருமைப்படுத்தும் விதமாக, இந்த 3 கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றுமா? தமிழக முதல்வர் விஜய்க்கு பிரபல எழுத்தாளர் வைத்த முக்கியமான வேண்டுகோள்!

Published

on

Director K. Bhagyaraj

பிரபல நாவல் எழுத்தாளர் மற்றும் சினிமா வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் முதல்வர் விஜய்க்கு எழுதிய பதிவில் கூறியிருப்பதாவது, இயக்குநர் கே பாக்யராஜ் மறைவுக்கு அரசு மரியாதை செய்து வழியனுப்ப உத்தரவிட்டமைக்கு இதயத்திலிருந்து நன்றி சார்.

அவரது மறைவையொட்டி சில கோரிக்கைகள் முன்வைக்கிறோம். பாக்யராஜ் சார் வாழ்ந்த லேக் ஏரியா ஐந்தாவது குறுக்குத் தெருவுக்கு அவரின் பெயர் சூட்டினால் அது காலத்திற்கும் அவருக்குச் செய்த மரியாதையாக நிலைத்து நிற்கும். அரசு வழங்கும் சினிமா விருதுகளில் ஜனரஞ்சகப் பிரிவுக்கான விருதை அவர் பெயர் சூட்டி வழங்கலாம். பாரதி ராஜா மற்றும் பாக்யராஜ் இருவருக்கும் அரசு சார்பாக ஒரு பொது இடத்தில் சிலைகள் வைக்கலாம்.

Advertisement

தமிழ் சினிமாவைப் பெருமைப் படுத்தும் அற்புதமான படைப்புகள் தந்திருக்கும் இருவருக்கும் சினிமாவிலிருந்து தலைவராக உருவாகியுள்ள நீங்கள் இந்த கெளரவங்களைச் செய்வீர்கள் என்று நம்பிக்கையுடன் இந்தக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கிறேன் என்று எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது பதிவில் கூறியிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in