LATEST NEWS
ஆட்சி கவிழும் அபாயம்… வைகோ போட்ட வெடிகுண்டு… முதல்வர் விஜய்க்கு புது பிரச்சினை…!!
மதிமுகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்களை தங்களது பதவிகளை ராஜினாமா செய்யுமாறு தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய் கூறியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் பேட்டியில் குறிப்பிட்ட விவகாரம் தவெக அரசுக்கு புதிய அரசியல் தலைவலியாக மாறியுள்ளது. அவர்கள் இருவரும் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தலில் அவர்களை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டியது தனது பொறுப்பு என முதல்வர் விஜய் உறுதியளித்ததாக வைகோ வெளிப்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, தவெக அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க “குதிரை பேரம்” பேசப்படுவதாகக் கூறி, வைகோவின் நேர்காணலை ஆதாரமாக வைத்து அதிமுக மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு அளிக்கத் திட்டமிட்டு வருகின்றன.
ஏற்கனவே அமமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை குதிரை பேரம் நடத்தி தவெக விலைக்கு வாங்கியதாகக் கூறி, ஆளுநரிடம் அளிக்கப்பட்ட ஒரு புகார் மனு நிலுவையில் உள்ளது. தற்போதைய சூழலில், வைகோவின் இந்த புதிய குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால் தவெக அரசு கவிழும் அபாயம் கூட ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவளிக்க வைகோ முடிவெடுத்துள்ள நிலையில், இந்த குதிரை பேர சர்ச்சை தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
