CRIME
தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் இப்படியா..? வீட்ல தனியா இருக்கீங்களா? எனக் கேட்ட பிளிங்கிட் டெலிவரி பாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!
ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக நிறுவனமான பிளிங்கிட் நிறுவனத்தின் டெலிவரி பாய் ஒருவர், ஆர்டர் கொடுக்கச் சென்ற இடத்தில் வாடிக்கையாளரான இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால், அந்தப் பெண் அவரைத் தடுத்து நிறுத்தி அறைந்ததோடு அவரது வேலையையும் பறிக்கச் செய்த பரபரப்புச் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ‘சியாஸ்பீக்ஸ்’ என்ற கணக்கில் அந்தப் பெண் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. “இன்று என்னால் ஒருவனுடைய வேலை பறிபோனது, அவன் அதற்கு முற்றிலும் தகுதியானவன் தான்” என்று கூறி அந்தப் பெண் நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.அந்தப் பெண்ணின் விவரிப்பின்படி, யாரோ ஒருவர் அவருக்கு அனுப்பிய பிளிங்கிட் ஆர்டரை டெலிவரி செய்ய அந்த இளைஞர் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பெண் அந்த டெலிவரி பாய்க்குப் குடிக்கத் தண்ணீர் கொடுத்துள்ளார். ஆனால், தண்ணீரைக் குடித்த அந்த இளைஞரின் புத்தி மாறியுள்ளது; வீட்டின் உள்ளே விநோதமாக நோட்டமிட்ட அவன், “வீட்டில் நீங்கள் தனியாகத்தான் இருக்கிறீர்களா?” என்று கேட்டுள்ளார். அதோடு நிறுத்தாமல், அந்தப் பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐடியைக் கேட்டு, அவரது அனுமதியின்றி மிக நெருக்கமாக வந்து அத்துமீற முயன்றுள்ளார். இதனால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அந்தப் பெண், சுதாரித்துக் கொண்டு அவனது கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டுள்ளார்; இதனால் பயந்துபோன அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.இந்தக் கொடூரமான அத்துமீறல் குறித்து அந்தப் பெண் உடனடியாக பிளிங்கிட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்ட பிளிங்கிட் நிறுவனம், உடனடியாக அந்த டெலிவரி பாயை பிளாக் செய்ததோடு, அவன் இனி நிறுவனத்தில் பணியாற்ற முடியாது என்று கூறி வேலையை விட்டு அதிரடியாக நீக்கி பெண்ணிற்குத் தகவல் கொடுத்துள்ளது. ஆபத்தான சூழலில் பெண்கள் பயந்து நடுங்காமல், எப்படித் தைரியமாகத் தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DaNSS51oZsy/?utm_source=ig_web_button_share_sheet
