LATEST NEWS
யாருமே இன்னும் திருந்தல பாஸ்… ஒரே ஒரு ஆட்டம் ஆடினா… எல்லாரும் குளோஸ் ஆகிடுவாங்க…. டிரம்ப் போட்ட பகீர் பதிவு..!!!
ஈரான் தலைவர் அலி கமேனிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அந்நாட்டு ஆட்சியாளர்கள் பெருந்திரளாகக் கூடியதைக் கண்டு டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சியடைந்துள்ளார். மக்கள் அனைவரும் கமேனியை வெறுப்பார்கள் என்று தாம் நினைத்ததாக இதுபற்றிக் பேசிய அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அங்குள்ள அனைவரும் இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ளனர் என்பதைக் கண்டு அவர் வியப்படைந்துள்ளார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், அங்குக் கூடியிருக்கும் அனைவரையும் ஒரே ஒரு தாக்குதலின் மூலம் வீழ்த்திவிட முடியும் என்று தெரிவித்துள்ளார். “ஒரே ஒரு தாக்குதல் தான்.. எல்லாரும் க்ளோஸ்” என்ற வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. எனினும், அந்தத் தீவிரமான நடவடிக்கையைத் தாம் செய்யப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அனைவரையும் ஒரே தாக்குதலில் வீழ்த்தினால், அதன் பிறகு அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கு யாருமே இருக்க மாட்டார்கள் என்பதால் தாம் அந்தத் தாக்குதலைச் செய்யப்போவதில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.
