மது போதையில் வந்த விபரீதம்…! விஷப் பாம்புகளை ஸ்நாக்ஸ் போல சாப்பிட்ட நபர்..! மருத்துவர்கள் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மது போதையில் வந்த விபரீதம்…! விஷப் பாம்புகளை ஸ்நாக்ஸ் போல சாப்பிட்ட நபர்..! மருத்துவர்கள் அதிர்ச்சி..!!

Published

on

ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்திலுள்ள பர்வாடிஹ் தோலா கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான புதன் பாரதி என்பவர், சனிக்கிழமை அன்று மது போதையில் தனது நண்பர்களுடன் சீட்டாடிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த வயல்வெளியில் இருந்து ஒரு நச்சுப் பாம்பு தவழ்ந்து வந்து அவரை கடிக்க முயன்றது. பொதுவாக பாம்பைக் கண்டால் மனிதர்கள் ஓடி ஒளிவார்கள். ஆனால், கடும் போதையில் இருந்த புதன் பாரதி, சற்றும் யோசிக்காமல் அந்தப் பாம்பை தன் கைகளால் பிடித்து, அங்கிருந்தவர்கள் தடுத்ததையும் மீறி அதை உயிரோடு கடித்துக் குதறி மென்று தின்றுள்ளார்.

முதலாவது பாம்பைத் தின்ற பிறகும் அவரது போதை வெறி அடங்கவில்லை. உடனடியாக அருகில் இருந்த மற்றொரு வயல்வெளிக்கு ஓடிச் சென்றார். அங்கு கிராம மக்கள் அடித்துக் கொன்று போட்டிருந்த இரண்டாவது பாம்பையும் எடுத்து, கடித்து மென்று தின்று தீர்த்தார். அதன் பிறகும் அடங்காத அவர், மீண்டும் மது அருந்திவிட்டு, மூன்றாவதாக மற்றொரு பாம்பையும் பிடித்துத் தின்ன முயன்றார். இதைக் கேள்விப்பட்டு பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்த அவருடைய குடும்பத்தினர், அழுது அழுது கெஞ்சிய பிறகே அவர் அந்தப் பாம்பை விடுவித்தார்.

Advertisement

பாம்புகளைத் தின்ற சிறிது நேரத்திலேயே புதன் பாரதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை பிரதாப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நச்சுப் பாம்புகளின் விஷம் வயிற்றில் உள்ள புண்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ இரத்தத்தில் கலந்தால் சில நிமிடங்களில் மரணம் சம்பவிக்கலாம் என்றும், புதன் பாரதி உயிர் பிழைப்பது ஒரு அற்புதம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in