LATEST NEWS
BIG BREAKING: கைதுக்கு பயந்து தவெகவில் இணையும் அன்பில் மகேஷ்…? தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு..!!
தனியார் பள்ளிகளுக்கான NOC சான்றிதழ் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் தனக்கு நெருங்கியவர்கள் மூலம் தவெக கட்சியில் இணைய தூதுவிட்டுள்ளதாக நாளிதழ்களில் பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பராக அறியப்படும் அன்பில் மகேஸ், திமுக-வை விட்டு விலகி இப்படி ஒரு முடிவை எடுக்க வாய்ப்பே இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் இந்தத் தகவலை மறுத்து விவாதித்து வருகின்றனர்.
