“என் கட்சியைப் பத்தி தப்பா பேசுவியா?”.. நண்பனையே ஓட ஓட விரட்டிக் கொலை செய்த திமுக உறுப்பினர்.. சென்னையில் நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் கட்சியைப் பத்தி தப்பா பேசுவியா?”.. நண்பனையே ஓட ஓட விரட்டிக் கொலை செய்த திமுக உறுப்பினர்.. சென்னையில் நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் திமுக உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் வாக்குவாதம், நள்ளிரவில் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர்களான கருணாகரன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் நேற்று இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, கருணாகரன் தனது சொந்த கட்சியான திமுகவைப் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் இருவருக்கும் இடையே கைக்கலப்பாக மாறிய நிலையில், கருணாகரன் ராஜேந்திரனைத் தாக்கியதாகத் தெரிகிறது.

இதனால் கடும் கோபமடைந்த ராஜேந்திரன், உடனடியாகத் தனது வீட்டிற்குச் சென்று கத்தியை எடுத்து வந்து கருணாகரனை சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருணாகரனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே கட்சியைச் சேர்ந்த நண்பர்கள், தங்களது சொந்த கட்சி குறித்த பேச்சில் ஏற்பட்ட மோதலால் கொலையில் முடிந்த இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளி ராஜேந்திரனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in