“வரலாற்றில் முதல்முறை.. நெம்மேலி பிளான்டில் நடந்த ட்விஸ்ட்.. முதல்வர் விஜய் அங்கே செய்த காரியம் என்ன?.. நெகிழ்ந்து போன அதிகாரிகள்”..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வரலாற்றில் முதல்முறை.. நெம்மேலி பிளான்டில் நடந்த ட்விஸ்ட்.. முதல்வர் விஜய் அங்கே செய்த காரியம் என்ன?.. நெகிழ்ந்து போன அதிகாரிகள்”..!!

Published

on

தென் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தமிழக முதல்வர் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ‘ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்’ தொழில்நுட்பத்தின் மூலம் நாளொன்றுக்கு 110 எம்.எல்.டி முதல் 150 எம்.எல்.டி வரை இங்கு குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் 2024-ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது. தமிழக வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத வகையில், நகராட்சி நிர்வாகத் துறையை முதலமைச்சர் தனது கட்டுப்பாட்டில்வைத்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

அந்த வகையில், தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் துறையின் முக்கிய நீர் ஆதார நிலையத்திற்கு முதல்வர் விஜய் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் சுத்திகரிப்பு நிலையத்தின் பல்வேறு பிரிவுகளைச் சுற்றிப் பார்த்த முதல்வர் விஜய், அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். குறிப்பாக, கடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த குடிநீரை அவர் நேரில் பருகி, அதன் தரத்தை ஆய்வு செய்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகின்றன. முதலமைச்சரின் இந்த அதிரடி விசிட் மற்றும் குடிநீர் பருகிய நிகழ்வு அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in