LATEST NEWS
பொதுமக்களோடு ஒருவராக முதலமைச்சர் விஜய்..! டிக்கெட் எடுத்து சென்னை மெட்ரோ ரயிலில் பயணம்.. வைரலாகும் மாஸ் வீடியோ…!!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் சென்னையில் நடைபெற்று வரும் பல்வேறு முக்கிய திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, இன்று சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக தலைமைச் செயலகத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவர், ஓமந்தூரார் மெட்ரோ இரயில் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து இரயில் மூலம் நந்தனம் வரை பயணித்தார். நந்தனத்தில் உள்ள மெட்ரோ இரயில் தலைமையகம் மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
https://www.instagram.com/reel/DbX_XfVOaba/?utm_source=ig_web_button_share_sheet
அதனைத் தொடர்ந்து, கிண்டி கத்திப்பாரா மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர், சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்ட வழித்தடமான போரூர் – பூந்தமல்லி இடையே சோதனை முறையில் இயக்கப்படும் அதிநவீன ஆளில்லா மெட்ரோ இரயிலில் ஏறி பூந்தமல்லி வரை அவரே நேரடியாகப் பயணம் செய்து அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறார்.
முதலமைச்சர் பொதுமக்களைப் போலத் தனியாகத் டிக்கெட் எடுத்து மெட்ரோ இரயிலில் பயணம் செய்ததால், அவரைக் காண இரயில் நிலையங்களிலும், வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், முதலமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சென்னை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் கட்டுமானப் பகுதிகள் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
