நெஞ்சை உலுக்கும் கொடூரம்!.. உடல் முழுவதும் கடித்து.. கூட்டு பாலியல் வன்கொடுமை.. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த நரக வேதனை.. பிரேத பரிசோதனையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

நெஞ்சை உலுக்கும் கொடூரம்!.. உடல் முழுவதும் கடித்து.. கூட்டு பாலியல் வன்கொடுமை.. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த நரக வேதனை.. பிரேத பரிசோதனையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!

Published

on

மேற்கு வங்க மாநிலம் பரூய்பூர் பகுதியில், கடைக்குச் சாப்பாடு வாங்கச் சென்ற 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, குளத்தில் வீசிக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி நீண்ட நேரமாகியும் திரும்பாததால், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் உடலில் கடித்த காயங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கொடூரமான கீறல்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தலையில் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டு அவர் உயிருடன் இருந்த நிலையிலேயே குளத்தில் வீசப்பட்டதால், மூழ்கி உயிரிழந்துள்ளார் என்பதும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முதன்மை குற்றவாளி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இக்கொடூர சம்பவத்தைக் கண்டித்து பரூய்பூர் பகுதி பொதுமக்கள் டயர்களை எரித்தும், சாலை மற்றும் இரயில் மறியலில் ஈடுபட்டும் தீவிர போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டம் ஒருகட்டத்தில் வன்முறையாக மாறியதில் போலீஸ் வாகனங்கள் தாக்கப்பட்டதோடு, ஏற்பட்ட மோதலில் எதிர்பாராதவிதமாக ஒரு சிறுவன் உயிரிழந்தான். இதனால் அப்பகுதியில் பதற்றத்தைத் தணிக்க உடனடியாகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பலத்த அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருவதோடு, கைது செய்யப்பட்டுள்ள 3 குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in