CINEMA
“அப்படியெல்லாம் பேசினாங்க..!பக்கபலமாக நின்ற பெற்றோர்..!விமர்சனங்கள் குறித்து மனம் திறந்த நடிகை பரீனா ஆசாத்..!
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகத் தன் பயணத்தைத் தொடங்கி, பின்னர் சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பரீனா ஆசாத். விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பாரதி கண்ணம்மா’ தொடரில், ‘வெண்பா’ என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே இவருக்குத் திருமணமும், அதைத் தொடர்ந்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இதற்குப் பின் சில தொடர்களில் நடித்தாலும், அவை எதிர்பார்த்த அளவு இவருக்குப் பெரிய அடையாளத்தைத் தரவில்லை. தற்போது திரைப்பட நிகழ்ச்சிகள், தனியார் விழாக்களைத் தொகுத்து வழங்குவது மற்றும் பிரத்யேக போட்டோஷூட்களை நடத்துவது என அவர் தொடர்ந்து பிஸியாக இயங்கி வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் குடும்ப பின்னணி மற்றும் தான் சந்தித்த விமர்சனங்கள் குறித்து பரீனா மனம் திறந்துள்ளார். தான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தன் பெற்றோர்கள் மிகவும் யதார்த்தமானவர்கள் என்றும், மதக் கோட்பாடுகளில் தீவிரமாக ஈடுபடாதவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பகாலத்தில் குட்டையான ஆடை அணிந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று பத்திரிகையில் வெளியானபோது, அவரது மாமா குடும்பத்தினரிடம் அதை ஒரு பெரிய பிரச்னையாகக் கிளப்பியுள்ளார். ஆனால், அந்த இக்கட்டான சூழலில் பரீனாவின் பெற்றோர் அவருக்குப் பக்கபலமாக நின்று, “இது அவளுடைய தனிப்பட்ட விருப்பம், அவளுக்குப் பிடித்ததைத்தான் செய்கிறாள்” என்று கூறி உறவினர்களின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துத் தனக்கு முழு ஆதரவளித்ததாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
