LATEST NEWS
2 பல்புக்கு ரூ.51,494 பில்லா..? மின்வாரியத்தின் அலட்சியம்… அபராதத்துடன் அலறவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்..!!!
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷிபி தேவி என்ற விதவைப் பெண்மணி, தனது வீட்டில் இரண்டு மூன்று மின்விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இவரது கணவர் சுரத் ராம் கடந்த 2013ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், மின் இணைப்பு தொடர்ந்து அவரது பெயரிலேயே இருந்துள்ளது. வழக்கமாக மாதத்திற்கு ரூ.106 முதல் ரூ.220 வரை மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்த இந்த குடும்பத்திற்கு, கடந்த 2022ஆம் ஆண்டில் திடீரென ரூ.51,494 மின் கட்டணமாக விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மின் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் கிடைக்கவி
மின் இணைப்பு தனது பெயருக்கு மாற்றப்பட வேண்டும் என்று ஷிபி தேவி வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் அதைச் செய்யவில்லை. மேலும், இந்த அதீத மின் கட்டணப் புகார் குறித்து முறையான விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, பணத்தைச் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பைத் துண்டித்து விடுவோம் என அதிகாரிகள் அவரை மிரட்டியுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர் முதலில் ரூ.1,742 செலுத்தியுள்ளார். இருப்பினும், அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கிற்கு எதிராக அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், மின்சார வாரியத்தின் சேவைக் குறைபாட்டைக் கடுமையாகக் கண்டித்தது. ஷிபி தேவிக்கு விதிக்கப்பட்ட ரூ.51,494 மின் கட்டண ரசீதை உடனடியாக ரத்து செய்யுமாறு உத்தரவிட்டது. அதோடு, அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10,000 மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.5,000 என மொத்தம் ரூ.15,000 தொகையை மின்சார வாரியம் வழங்க வேண்டும் என்றும், அவரது கணவர் பெயரில் உள்ள மின் இணைப்பை உடனடியாக ஷிபி தேவியின் பெயருக்கு மாற்ற வேண்டும் என்றும் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
