BREAKING: தவெக MLAவிடம் பேரம் பேசிய வழக்கு… அதிகாலையில் 2 பேர் மீது வழக்கு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: தவெக MLAவிடம் பேரம் பேசிய வழக்கு… அதிகாலையில் 2 பேர் மீது வழக்கு..!!

Published

on

தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரத்தில், இன்று அதிகாலையில் மேலும் 2 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அவர்கள் திமுகவுடன் தொடர்புடைய நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ்குமார் மற்றும் காங்கேயத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த பரபரப்பான பேரம் பேசும் வழக்கு தொடர்பாகத் தமிழக காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இன்று அதிகாலை நடந்த இந்த அதிரடி கைதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இதுவரை சிக்கியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in