LATEST NEWS
“கண் முன்னாடியே காதலி செத்தும் புத்தி வரல” ஜாமீன்ல வந்து மீண்டும் ‘மேஜிக் மஷ்ரூம்’ போதை… ஊட்டியை உலுக்கிய 4 கல்லூரி மாணவர்கள் கைது..!!
நீலகிரி வனப்பகுதியில் ஆபத்தான ‘மேஜிக் மஷ்ரூம்’ எனப்படும் போதை காளான்களைப் பறித்துப் பயன்படுத்திய ஊட்டியைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவர்களைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த ஆபத்தான காளான்களை வனப்பகுதிக்குள் ரகசியமாகத் தேடிப் பிடித்து, அவர்கள் போதைக்காகப் பயன்படுத்தியபோது கச்சிதமாகப் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு பரவி வரும் இந்த ஆபத்தான போதை கலாச்சாரம் நீலகிரி மாவட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஆகாஷ் என்ற மாணவனின் பின்னணி குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாணவன் கடந்த 2024ஆம் ஆண்டில் தனது காதலியுடன் சேர்ந்து இதேபோன்று போதை காளானை உட்கொண்டபோது, அவரது கண் முன்னேயே காதலி பரிதாபமாக உயிரிழந்தார். அந்தப் பயங்கர கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பிறகும், போதை வெறி அடங்காமல் மீண்டும் தனது நண்பர்களுடன் சேர்ந்து காளான் பறித்துப் பயன்படுத்தியபோது தற்பொழுது போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.
