அதை சொல்ல தில்லு இருக்கா.? திராணி இருக்கா..? ஒரு **ம் கிடையாது” மேடையிலேயே வார்த்தையை விட்ட முதல்வர் விஜய்… தமிழக அரசியலில் சலசலப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதை சொல்ல தில்லு இருக்கா.? திராணி இருக்கா..? ஒரு **ம் கிடையாது” மேடையிலேயே வார்த்தையை விட்ட முதல்வர் விஜய்… தமிழக அரசியலில் சலசலப்பு..!!

Published

on

கரூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், திமுகவினர் தன் அரசின் மீது திட்டமிட்டு குறை கூறி வருவதாகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தவெக அரசு மீது திமுகவினர் ‘டிசைன் டிசைனாக’ குறை கூறி வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பொதுமேடையில் நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தமக்கு அதிகாரத்தை விட மக்களே முக்கியம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். “பணமா?, ஜனமா? என்று கேட்டால் எனக்கு ஜனம்தான் முக்கியம்” என்று குறிப்பிட்ட அவர், தன் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுபவர்களுக்குப் பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ளார்.

Advertisement

மேலும், “நம்ம மேல இவ்வளவு குறை சொல்றாங்களே, நான் இப்போ பேசுற மாதிரி அவங்களால ஓப்பனா பேச முடியுமா? அந்த தில்லு இருக்கா?; அந்த திராணி இருக்கா?, ஒரு ___ம் கிடையாது” என்று மிகவும் ஆக்ரோஷமாகப் பேசினார். முதலமைச்சர் விஜய்யின் இந்த ஆவேசமான பேச்சு அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in