LATEST NEWS
நியாபகம் இருக்கா..? .ஸ்டாலின் உங்களுக்கு போட்ட கொத்து புரோட்டாவை மறந்துட்டீங்களா…? முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு ஆக்ரோஷ பதிலடி..!!
கரூரில் நடைபெற்ற அரசு மற்றும் கட்சி விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியைத் தவெக கைப்பற்றியதைக் குறிப்பிட்டு விடுத்த ‘கொத்து புரோட்டா’ விமர்சனத்திற்குத் திமுக முக்கியத் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான மு. அப்பாவு மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். கொளத்தூரில் நாங்கள் வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்கே அங்கு அவர்களுக்குக் கொத்து புரோட்டா போட்டுவிட்டோம் என முதல்வர் விஜய் நகைச்சுவையாகவும் ஆவேசமாகவும் பேசியிருந்தார். இந்தச் சர்ச்சை பேச்சு திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பாவு தனது எக்ஸ் தள பக்கத்தில் இதற்கு மிகக் காரசாரமாகப் பதிலளித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் அப்பாவு, முதல்வர் விஜய்யின் கடந்தகால அரசியல் சவால்களைச் சுட்டிக்காட்டி, கடந்த தேர்தலில் 127 தொகுதிகளில் தோல்வியைத் தழுவியதை மறந்துவிட்டு, மக்கள் தங்களை நிராகரித்ததை மறைக்க தவெக அரசு வீண் பெருமை பேசி வருவதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திராவிடக் கட்சிகளைத் ‘தூர்நாற்ற சக்திகள்’ என விமர்சிக்கும் தவெகவினர், தாங்கள் ‘தூய சக்தி’ எனத் தம்பட்டம் அடித்துக்கொண்டு, திரைக்குப் பின்னால் தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கரூரில் நடந்த விபத்து உள்ளிட்ட நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே முதல்வர் இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதாக அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். திமுக தலைவர்களின் இத்தகைய பதிலடிகள் தவெகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
