CRIME
“அந்தரங்க புகைப்படங்களை கசியவிடுவேன்”..13 வயது சிறுமியை சீரழித்த காமுகன்… விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!
சிங்கப்பூரில் 13 வயது சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 27 வயதான ஃபூங் யோங் என்ற நபருக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 24 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மே 2023 முதல் ஜூலை 2023 வரையிலான காலக்கட்டத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியை ஆன்லைன் மூலம் தொடர்புகொண்டு, அவரது வயதை அறிந்திருந்தும் யோங் பல்வேறு பாலியல் அத்துமீறல்களை அரங்கேற்றியுள்ளார். சிறுமியை அடித்துக் துன்புறுத்தியது மட்டுமன்றி, படிக்கட்டுத் தளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, எரியும் சிகரெட்டால் சிறுமியின் உடலில் சுட்டு வக்கிரமாக நடந்து கொண்டுள்ளார். யோங் மீது சுமத்தப்பட்ட 20 குற்றச்சாட்டுகளில் 6 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிமன்றம் இந்த கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.
மேலும், அந்த நபரின் பண ஆசைக்காக அச்சிறுமியை மிரட்டி, மற்ற ஆண்களுடன் பணத்திற்காகப் பாலியல் உறவில் ஈடுபட வைக்கும் விபச்சாரத் தொழிலிலும் தள்ளியுள்ளார். இதற்காக ஆன்லைன் தளங்களில் விளம்பரம் செய்து, சிறுமி சம்பாதித்த பணத்திலிருந்து சுமார் 3,000 டாலர்களைப் பறித்துக்கொண்ட யோங், ஒரு கட்டத்திற்கு மேல் விளம்பரப்படுத்துவதை நிறுத்தினாலும் சிறுமியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகச் சுரண்டியுள்ளார். இறுதியாக, ஜூன் 2023-ல் சிறுமி தனக்கு 5,000 டாலர் தராவிட்டால், அவரது அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் கசியவிடுவதாகக் கூறி மிரட்டலிலும் ஈடுபட்டுள்ளார். பண ஆதாயத்திற்காக ஒரு சிறுமியின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி, வன்முறையான முறையில் பாலியல் வேட்டையாடிய ஒரு நபருக்கு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
