அதிர்ச்சி!.. ஜாலியாக குடும்பத்துடன் ட்ரெக்கிங் சென்ற ஆசிரியர்.. இறுதியில் நேர்ந்த கொடூரம்.. கண்காணிப்பு கோபுரத்தின் அருகே துடிதுடித்த உயிர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிர்ச்சி!.. ஜாலியாக குடும்பத்துடன் ட்ரெக்கிங் சென்ற ஆசிரியர்.. இறுதியில் நேர்ந்த கொடூரம்.. கண்காணிப்பு கோபுரத்தின் அருகே துடிதுடித்த உயிர்..!!

Published

on

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், டி.ஆர்.டி.ஓ டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த பிரியமோல் (47) என்ற பள்ளி ஆசிரியை, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் அனந்தகிரி நகர்ப்புற பூங்காவிற்கு மலையேற்றத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள கண்காணிப்புக் கோபுரத்திற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி வழுக்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே மயங்கிச் சரிந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் வனத்துறை ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக விகாராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மலையேற்றத்தின் போது அவருக்கு ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இன்ப சுற்றுலாவிற்குச் சென்ற இடத்தில் ஆசிரியை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in