“வெளியே தண்ணீர்… உள்ளே 11 லட்சம் ரகசியம்”.. டிராக்டரை சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“வெளியே தண்ணீர்… உள்ளே 11 லட்சம் ரகசியம்”.. டிராக்டரை சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பகீர் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கோபிகஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் நள்ளிரவில் நடத்திய வாகன சோதனையின்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு தண்ணீர் டிராக்டரைச் சோதித்தனர். அப்போது, அந்தத் தண்ணீர் டேங்கரின் முன்பகுதியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,005 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. ஹரியானா மற்றும் பஞ்சாபில் இருந்து தண்ணீர் டிராக்டர்கள் மூலம் மதுபானங்களைக் கடத்தி, மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்திற்கு விற்பனை செய்ய முயன்ற உ.பி மாநிலம் தானா பவன் பகுதியைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் மனோஜ் (எ) ராகுல் சைனி என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஹரியானாவின் பானிபட் மாவட்டத்திலிருந்து பீகாருக்கு இந்த மதுபானங்களைக் கொண்டு சேர்ப்பதற்காகத் தனக்கு 25,000 ரூபாய் கூலி பேசப்பட்டதாக ஒப்புக்கொண்டார். மேலும், சோதனை அதிகாரிகளுக்குச் சந்தேகம் வராமல் இருக்கத் தண்ணீர் டேங்கர் போன்ற தோற்றத்தில் டிராக்டரை மாற்றியமைத்துக் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டர் மற்றும் டேங்கரைப் பறிமுதல் செய்த போலீசார், காவல் கண்காணிப்பாளர் சுபம் அகர்வால் தலைமையில் இந்த மாநிலங்களுக்கு இடையேயான மதுபானக் கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களை அடையாளம் காணத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in