BREAKING: மகளிர் உரிமைத்தொகை.. காலையிலேயே வெளியான மகிழ்ச்சி செய்தி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: மகளிர் உரிமைத்தொகை.. காலையிலேயே வெளியான மகிழ்ச்சி செய்தி…!!

Published

on

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் நடைபெறவுள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இக்கூட்டத்தொடரில், தவெக தேர்தலின் போது மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அதிரடி திட்டங்கள் மற்றும் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பட்ஜெட்டில் தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியான திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச் சேலை வழங்கும் திட்டம் உள்ளிட்ட முக்கிய நலத்திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தற்போதைய மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கும் மெகா அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் என்று மகளிர்கள் மிகுந்த ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in