LATEST NEWS
சென்னை டிராஃபிக்கிற்கு எண்ட் கார்டு!.. திருவான்மியூர் – உத்தண்டி இடையே மெகா மேம்பாலம்.. பட்ஜெட்டுக்கு முன் கசியும் மாஸ் பிளான்… முதல்வர் விஜய் போடப்போகும் ஸ்கெட்ச்..!!
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியது. இந்த முக்கியக் கூட்டத்தில், மாநிலத்தின் நீர்வளத்துறை மேம்பாடு மற்றும் பல்வேறு புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த ஆலோசனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மேலும், சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான மேம்பாலத் திட்டம் குறித்தும், அடுத்த மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள மாநில பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. புதிய திட்டங்கள் மற்றும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
